லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் த்ரிஷா, நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை தோழிகளுடன் ஷிர்டிக்குச் சென்று அங்கு கொண்டாடியுள்ளார். சாய்பாபா கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும், கேக் வெட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “உங்களது அளவுக்கதிகமான அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது இதயம் நன்றியுணர்வுடன் வெடிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ஆன்மீக ஈடுபாடு குறித்து அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத த்ரிஷா நேற்று தன்னுடைய பிறந்தநாளை ஷிர்டியில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சில நடிகைகள் பார்ட்டி வைத்து கொண்டாடும் பிறந்தநாளை பயபக்தியுடன் கொண்டாடியுள்ளார் த்ரிஷா .