அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன். “ஸ்கூபி டூ, கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி, 2, 3 ' ஆகிய படங்களின் இயக்குனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆரைப் பார்த்து வியந்து அவரைத் தன் படத்தில் ஒரு நாள் நடிக்க வைப்பேன் எனக் கூறியுள்ளார்.
“ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த அவர் யார், அருமையாக இருக்கிறார், அவரது பெயரென்ன ?. 'ஆர்ஆர்ஆர்' கடந்த வருடம் வெளிவந்த பெரிய படம். கூண்டிலிருந்து புலிகள் வெளியில் வர…அவரும் வர…ஆ….ஒரு நாள் அவருடன் பணி புரிய விருப்பம். அவர் அற்புதமானவர், கூலானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரத்தைத் தருவீர்கள் எனக் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது. அது என்னவென்று தேர்வு செய்ய வேண்டும். அதற்குக் கொஞ்ச காலம் ஆகும்,” என பதிலளித்துள்ளார்.
விரைவில் ஜுனியர் என்டிஆரின் ஹாலிவுட் அறிமுகத்தையும் பார்க்கலாம்.