மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று, தன் அழகால் இந்தியாவை மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். அதற்கடுத்து மூன்று வருடங்களில் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'இருவர்' தமிழ்ப் படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 'ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய்.
அதை நேற்று மும்பையில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் 2' பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிரூபித்தார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் மணிரத்னத்திடம், “ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நடிகையா ?,” எனக் கேட்டார்.
அதற்கு மணிரத்னம், “திரைப்பட இயக்குனர்கள் மிகவும் சுயநலவாதிகள். அவர்களது படத்தைப் பற்றி கவனமாக இருப்பார்கள். நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு நேசித்தாலும், எனது படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால் மட்டுமே அவரிடம் நடிக்கக் கேட்பேன். அவர் அதற்கு சரி என்று சொல்லிவிடுவார்,” எனப் புகழ்ந்து பேசினார்.
அதைக் கேட்டதுமே சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்திடம் வந்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கட்டி அணைத்துக் கொண்டார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.