காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான படம் மப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக் பத்து தல என்ற பெயரில் தயாரானது. சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான இந்த படத்தை கிருஷ்ணா இயக்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அதன் பிறகு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் அதையடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று இரண்டு படங்களில் சிம்பு நடித்து அந்த படங்கள் வெளியான பிறகுதான் பத்து தல திரைக்கு வந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் 30ம் தேதி திரைக்கு வந்த இப்படம் நல்ல ஓப்பனிங்கை கொடுத்தாலும், ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ஓடிடி தளத்தில் பத்து தல படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரைக்கு வந்து 30 நாட்களுக்கு முன்பே 10 தல படம் ஓடிடியில் வெளியாகப் போகிறது.