மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டியில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோரும் பார்த்து ரசித்தார்கள். அதோடு நடிகர் தனுஷ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகன், மகளுடன் வந்திருந்தார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து நடிகர் தனுஷ் இந்த போட்டியை கண்டுகளித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின.