சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
கவுதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இப்படத்தில் சாயாதேவி, முனீஸ்காந்த், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. இமான் இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் அரசியல் மற்றும் கிராமத்து சம்பிரதாயங்கள் கலந்த கதையில் உருவாகி இருப்பது இந்த டீசரில் தெரிகிறது.
குறிப்பாக, காப்பாற்றுவதுதான்டா சாமி, சாமி பேர சொல்லிக்கிட்டு வெட்டிக்கிட்டு செத்தீங்கன்னா உங்களுக்கு சாமி கும்பிட தகுதி இல்லை என்ற வசனமும், அரசியல்ல மேல ஏற ஏற கொத்துறதுக்கு பாம்பு வரும், குத்துறதுக்கு கத்தியும் வரும் என்று அதிரடியான வசனங்கள் இந்த டீசரில் இடம் பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.