ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் அதேகூட்டணி உடன் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஆந்திர செம்மர கடத்தல் அதிரடிப்படை முன்னாள் ஜ. ஜி. காந்தாராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛செம்மரம் கடத்தலை தடுக்க ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் எடுத்த முயற்சிகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். செம்மர கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு, போலீசாரை லஞ்சம் வாங்குவதாக காட்டியது வருத்தம் அளிக்கிறது. புஷ்பா 2 பாகத்தில் போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.




