லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது. மேலும் விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை அல்லாமல் மதுரை அல்லது திருச்சியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இதை தெரிவித்தார் அப்பட தயாரிப்பாளர் லலித் குமார்.
சமீப காலமாக விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாட்களில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்குமாறு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார் விஜய். அந்த அடிப்படையில் தென் மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக லியோ படத்தின் ஆடியோ விழாவை தென் மாவட்டத்தில் நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது.