ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
பொதுவாகவே நமது தென்னிந்திய மொழிகளில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெரும் படங்கள் கூட வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாலிவுட் படம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த மாதம் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறிப்பிடும்போது பாலிவுட் படம் என்று குறிப்பிட்டது தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தி படங்களை பாலிவுட் என்று அழைப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக கலந்து கொண்டு வரும் இயக்குனர் மணிரத்னம், சென்னையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கம் ஒன்றிலும் கலந்து கொண்டு பேசியபோது இந்த கருத்தை ஒரு தீர்வாக முன் வைத்தார்.
அவரிடம் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் பாலிவுட் படங்களாகவே வெளியில் கருதப்படுகின்றனவே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம், “இந்தி திரையுலகம் தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டால் மக்களும் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார். இதே கருத்தரங்கில் பேசிய இயக்குனர் வெற்றிமாறனும், “எனக்கு பாலிவுட், கோலிவுட் என்கிற 'வுட்'டுகளில் நம்பிக்கை இல்லை. நாம் மொத்தமாக அனைத்தையுமே இந்திய சினிமா ஆக பார்க்க வேண்டும்” என்று கூறினார்.