ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பாகம் 2021ம் வருடம் வெளியாகி சுமார் 350 கோடியை வசூலித்தது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிற. இந்நிலையில் இன்று காலை முதல் 'புஷ்பா 2'தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திலும், இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள் உலவி வருகின்றன. 2000 கோடி வரை படத்திற்கு வியாபாரம் நடப்பதாக யாரோ எழுதி இருந்தார்கள். ஹிந்தி உரிமை 200 கோடி, இசை உரிமை 75 கோடி, அல்லு அர்ஜுன் சம்பளம் 200 கோடி, சுகுமார் சம்பளம் 50 கோடி என ஓவராக எழுதியிருந்தார்கள். அது கூட வருமான வரி சோதனைக்குக் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
சமூக வலைத்தளங்களில் இப்படி யாரோ கிளப்பிவிட்டு 'புஷ்பா' குழுவுக்கு இப்படி சோதனை ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.