அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த விஜய் வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக என்ட்ரி கொடுத்தார். வம்சி இயக்கிய இந்த படம் வாரிசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சமீபத்தில் கடந்தபோன பொங்கலுக்கு வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கோபி சந்தை பொறுத்தவரை ஹீரோக்களை மாஸாக காட்டக் கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.