நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஹாஸ்டல் உட்பட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது போர் தொழில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கிடாரி உள்பட சில படங்களில் நடித்த மலையாக நடிகை நிகிலா விமல் நடிக்கிறார். விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் வாரிசு, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் சரத்குமார் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிக்கிறார்.
இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. புலனாய்வு திரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' படம் உருவாகிறது.