பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? |
ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கடந்த 2021ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. பசுபதி, துசரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வட சென்னையில் பிரபலமாக திகழ்ந்த குத்தச்சண்டையை மையமாக வைத்து இந்தப்படம் வெளிவந்தது. தற்போது இதன் அடுத்த பாகமும் உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று உலகளவில் புகழ் பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு சார்பட்டா பரம்பரை படம் தேர்வாகியுள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.