கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே |
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படம் கடந்த மாதம் வெளிவந்ததது. மதநல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் பேசிய இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி பதிவு செய்துள்ளேன். அந்த கதையை எனது அனுமதி இல்லாமல் 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. அதனால், இந்த படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி படத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன் படம் வெளியாகி அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.