வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கி உள்ளார். அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட அளவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி, விவசாய அணி உட்பட்ட அனைத்து அணிகளில் உள்ள நிர்வாகிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தற்போது விஜய் தனது மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் . இது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைப்புடன் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.