செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. அவருடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை நீல் கிருஷ்ணா இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர், சாலை ஓரத்தில் உள்ள மக்களுக்கு உணவளித்து உள்ளனர். இருவரும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி இருக்கிறார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி கொட்டும் மழையில் அவர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.