நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கபட இருக்கிறார்கள். தற்போது வேட்புமனு தாக்கல் முடிந்து போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், செயலாளர் மன்னனும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன், தமிழ்குமரன், விடியல் ராஜூ போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன் போட்டியிடுகிறார்கள்.
இணை செயலாளர் பதவிக்கு டேவிட் ராஜ், இசக்கி ராஜா, ஜெமினி ராகவா, மணிகண்டன், சவுந்தர பாண்டியன் நிற்கிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், கணேஷ், ரவீந்தர் சந்திரசேகரன், சிங்காரவேலன் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர 26 பேர் கொண்ட பொதுகுழுவிற்கு நடிகை தேவயானி உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள்.