ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் 'குற்றப் பரம்பரையினர்' என்று அறிவிக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைகளை அனுபவத்தனர். சுதந்திரத்திற்கு பிறகுதான் குற்றம்பரம்பரையினர் என்ற அடையாளம் நீக்கப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளது. தற்போது நடிகராக உள்ள வேல ராமமூர்த்தி குற்றப்பரம்பரை என்ற பெயரிலேயே நாவல் ஒன்றை எழுதி உள்ளார். ரத்னகுமார் என்பவரும் எழுதி உள்ளார்,
இதில் வேல ராமமூர்த்தியின் நாவலை பாலாவும், ரத்னகுமார் கதையை பாரதிராஜாவும் இயக்குவதாக அறிவித்தார்கள். ஆனால் இருவருமே இந்த பணிகளை தொடங்கவில்லை. அவரவர் வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் குற்றப்பரம்பரையை வெப் தொடராக இயக்க இருப்பதாக அறிவித்தார்.
தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தொடரை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்கிறார், வேல ராமமூர்த்தி இதற்கான திரைக்கதை, வசனம் எழுதுவதோடு அவரே முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் மதுரையை சுற்றியுள்ள மலை கிராமங்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது.