கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று பெரிய வசூலைக் குவித்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகியது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 26 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது. இதனிடையே, 'பொன்னியின் செல்வன் 2' வெளியாவதை முன்னிட்டு, அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி 'பொன்னியின் செல்வன் 1' படத்தை வெளியிட உள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், “மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென…
அவர் பதில்….,” என மணிரத்னத்தின் வாட்சப் பதிலை வெளியிட்டுள்ளார். அதில்தான் மணிரத்னம் முதல் பாக வெளியீடு பற்றி பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் வெளியீட்டின் போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தையே தான் இன்னும் பார்க்கவில்லை என பார்த்திபன் பேசியிருந்தார். அதை பல ரசிகர்களும் கிண்டலடித்திருந்தனர்.
ஏப்ரல் 21ல் முதல் பாகம் மீண்டும் வெளியாகும் போதாவது பார்த்திபன் பார்ப்பாரா ?. ஒரு வேளை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநலமாக முதல் பாகத்தை மீண்டும் வெளியிடுங்கள் என கேட்டிருப்பாரோ ?.