வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நடிகர் சூரி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இப்போது இயக்குனர் வெற்றி மாறனின் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து, கடந்தவாரம் இப்படம் வெளியாகி சூரிக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் இரண்டு, மூன்று மாதங்களில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து அவருக்கு ஹீரோ பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதையடுத்து மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுகுமார் தற்போது இயக்கியுள்ள இராவண கோட்டம் பட வெளியீட்டிற்கு பிறகே சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. நேரடியாக ஓடிடியில் இந்தப்படம் வெளியாகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.