'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதை இசையமைப்பாளர் மரகதமணியும் பாடல் ஆசிரியர் சந்திரபோஸும் இணைந்து பெற்றுக்கொண்டனர். அதேசமயம் இந்த படத்திற்கோ அல்லது இயக்குனர் ராஜமவுலிக்கோ விருது கிடைக்கும் என பெரிய அளவில் எதிர்பார்த்த ரசிகர்கள் இதில் ஏமாற்றம் அடைந்தது உண்மைதான்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது விழா முடிந்த பின்னர், இந்த ஆஸ்கர் விருதை பெறுவதற்காக ஆஆர்ஆர் படக்குழுவினர் தரப்பில் இருந்து 80 கோடி செலவு செய்யப்பட்டது என்று ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் அப்படி எதுவும் செலவு செய்யவில்லை என விளக்கம் அளித்து படத்தின் தயாரிப்பாளர் ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, “80 கோடி செலவு செய்யப்பட்டது என்று சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை. நடைமுறை செலவுகள், புரமோஷன், போக்குவரத்து என சுமார் 8.5 கோடி வரை செலவு செய்தது மட்டுமே உண்மை'' என்று புதிய கணக்கு ஒன்றை கூறினார்.
ஆனால் ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படத்தை அனுப்பிய விவரம் குறித்து நன்கு தெரிந்த திரையுலக வட்டாரத்தினர் ராஜமவுலியின் மகன் சொல்லும் கணக்கு தவறு என்றும், உண்மையில் 80 கோடி வரை செலவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அதை அவர்கள் மறைக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
ஏனென்றால் ஆர்ஆர்ஆர் படத்துக்கு கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் பெற வேண்டும் என்பதற்காக 80 கோடி வரை அவர்கள் செலவு செய்ததாகவும் ஆனால் அவர்களுக்கு இதுகுறித்து வாக்குறுதி கொடுத்தவர்கள் ஒரே ஒரு பிரிவில் மட்டும் ஆஸ்கர் விருதை கொடுத்துவிட்டு ராஜமவுலி அண்ட் கோ-வை ஏமாற்றி விட்டதாகவும், அதனால்தான் ராஜமவுலியின் மகன் தற்போது கணக்கை குறைத்து சொல்கிறார் என்றும் ஒரு தகவலை தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் சிலர் கூறி வருகின்றனர்.