சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

திரைப் பிரபலங்களுடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் எப்போதும் எந்த இடம் என்று பார்க்காமல் கூட ஆவலோடு முண்டியடிப்பார்கள். சிவகுமார், உன்னி முகுந்தன், பாலகிருஷ்ணா போன்ற சில நடிகர்கள் ரசிகர்களின் செல்போனை தட்டி விட்டதையும் ரசிகர்கள் இடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டதையும் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் அமைதியே உருவான இயக்குனர் ராஜமவுலி கூட தன்னிடம் செல்பி எடுக்க வந்த ஒருவரை தள்ளிவிட்டு காரில் ஏறி செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல வில்லன் மற்றும் குணசசித்திர நடிகரான போட்டோ சீனிவாச ராவ் இன்று (ஜூலை 13) காலமானார் இவர் தமிழில் 'சாமி, கோ' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர். தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் இவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் கோட்டா சீனிவாசராவ் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் வெளியே வந்து தனது காரில் ஏறிச் செல்வதற்கு முயன்றார்.
அப்போது ஒரு ரசிகர் அவரை பின் தொடர்ந்தபடி மதிப்பு செல்பி எடுக்க முயன்றார். ஒரு கட்டத்தில் அவரை மறித்து செல்பி எடுக்க முயற்சிக்கவே, இப்படிப்பட்ட சமயத்திலா செல்பி எடுப்பது என்பது போன்று அவரை கடிந்துகொண்டு கோபம் காட்டிய ராஜமவுலி அவரை இடது கையால் திட்டி தள்ளி விட்டு தனது காரில் ஏறிச் சென்றார். துக்க நிகழ்வுகளில் கூட இப்படி அஞ்சலி செலுத்த வரும் பிரபலங்களிடம் செல்பி எடுக்கும் மனப்பான்மையை எப்போதுதான் ரசிகர்கள் கைவிடுவார்களோ.?