டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நேரம் படத்தில் நிவின்பாலியின் தங்கையாகவும் ஓம் சாந்தி ஒசனா படத்தில் நிவின்பாலியின் தோழியாகவும் நடித்தவர் அஞ்சு குரியன். தமிழில் 'சென்னை டூ சிங்கப்பூர்' 'ஜூலை காற்றில் மற்றும் சமீபத்தில் வெளியான சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தநிலையில் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள அஞ்சு குரியன் அங்கே ஸ்கை டைவிங் சாகசம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவருடைய நிறைவேற்ற வேண்டிய ஆசைகள் கொண்ட பக்கெட் லிஸ்டில் இந்த ஸ்கை டைவிங்கும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அஞ்சு குரியன் பறக்கும் விமானத்தில் இருந்து ஆகாய வெளியில் குதித்து குயீன்ஸ்லாந்து நிலப்பரப்புக்கு மேல் ஸ்கை டைவிங்கில் பறந்த அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கும் இனிமையான ஒன்றாக இருக்கும். இதற்காக குயின்ஸ் லேண்ட் ஸ்கை டைவிங் அமைப்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.




