மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ள '1947- ஆகஸ்ட்16' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தை, ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி ஆகியோருடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த, 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். அவர்கள் தயாரித்த 'மான்கராத்தே' படத்தில் நான் ஹீரோ. இன்று அவர்கள் தயாரிப்பில் உருவான, '1947 ஆகஸ்ட்16' படத்தில் நான் சிறப்பு விருந்தினர். விரைவில் புதிய அறிவிப்பை நீங்கள் கேட்பீர்கள்.
ஒருத்தர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எப்படியாவது என்கூட இருப்பவர் வளர்ந்து விட வேண்டும் என துடிப்பவர் வெகு சிலரே. வீரம் படத்தில் அஜித் சொல்வது போல் தான், கூட இருக்குறவங்கள நாம் பார்த்துக் கொண்டால், மேலே இருக்குறவன் நம்மை பார்த்துக் கொள்வார். நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்திக் சாரை பார்த்தேன். அழகான நடிகர். எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம். நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.