மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களை தொடர்ந்து அடுத்து 'லேபிள்' என்கிற வெப் சீரிஸை இயக்குகிறார். இதில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
அருண்ராஜா காமராஜ் கூறுகையில், " ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒருசிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும்" என்றார்.
முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.