அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ்த் திரையுலகில் தற்போது தியேட்டர்களைப் பொறுத்தவரையில் ஒரு தடுமாற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஜனவரி மாதம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்களுக்குப் பிறகு தியேட்டர்களுக்கு மக்கள் வருகை பெரிதும் குறைந்துவிட்டது. அந்தப் படங்கள் வெளிவந்த பின் கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த படங்களில் கவின் நடித்த 'டாடா', தனுஷ் நடித்த 'வாத்தி', சசிகுமார் நடித்த 'அயோத்தி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ஓரளவிற்கு ஓடியிருக்கின்றன.
இந்த மார்ச் மாதத்தில் கடந்த நான்கு வாரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. இருப்பினும் தமிழகம் முழுவதுமே கடந்த நான்கு வாரங்களில் பல தியேட்டர்களில் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள் தொடர்ந்து சில நாட்கள் கூட மூடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
அடுத்த வாரம் மார்ச் 30ம் தேதி சிம்பு நடித்துள்ள 'பத்து தல', மார்ச் 31ம் தேதி சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'விடுதலை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அந்தப் படங்கள் தியேட்டர்களுக்கு மக்களை மீண்டும் வரவழைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் பல படங்கள் வர உள்ளன. குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு ரசிகர்கள் வருவதே இல்லை என தியேட்டர்காரர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இந்நிலை மாற தமிழ்த் திரையுலகினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மாபெரும் கேள்வியாக உள்ளது. அது பற்றி அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.