ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி. அப்போது அவரை சூழ்ந்து ரசிகர்கள் பல பேர் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் ரஜினியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினி காரில் ஏறி அமர்ந்துவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் கேட்க, காரைவிட்டு இறங்கி வந்த ரஜினி உடன் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் குரூப்பாகவும், தனித்தனியாகவும் செல்பி எடுத்துக் கொண்டனர்.