ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. சுமார் 110 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்வர்யா கொடுத்த புகாரில் 60 பவுன் என்று கூறியுள்ளார். ஆனால் கைப்பற்றியது 110 பவுன் நகைகள். சொன்னதை விட அதிக நகைகள் இருப்பதால் , போலீஸ் ஜஸ்வர்யா ரஜினியிடம் இதற்கான ரசீது கேட்டு விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.