டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், டில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்னாச்சு? என்கிற கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்து வந்த நிலையில் தற்போது, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




