இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் மம்முட்டி தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று 'காதல் தி கோர்'. இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. அதுமட்டுமல்ல, மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. அவரது மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.