டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

பாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா குடும்பமான திலீப்குமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சாயிஷா. இந்தி, தெலுங்கு படத்தில் நடித்த சாயிஷா 'வனமகன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி படங்களில் நடித்தார். பின்னர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சாயிஷா 'யுவ ரத்னா' என்ற கன்னட படத்தில் நடித்தார்.
தற்போது சாயிஷா ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார். 'பத்து தல' படத்தில் 'ராவடி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த பாடலில் சாயிஷாவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் ஆடியுள்ளார்.
நட்புக்காகவே இந்த படத்தில் சாயிஷா ஆடியுள்ளார். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட மாட்டார். ஆனால் மீண்டும் நடிக்க வருகிறார். இதற்கான கதை தேர்வு நடந்து வருகிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




