தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தபோது ஆர்யா, சாயிஷா இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு அர்யானா என்ற ஒரு மகள் உள்ளார். ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது நான்காவது திருமண நாளை நேற்று கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சாயிஷா, ‛‛நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையின் காதலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். பொறுமை, வலிமை மற்றும் என்னை மகிழ்விக்கும் திறன் கொண்ட ஒரு திடமான மனிதர். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் ஜான். திருமணம் உங்களுக்கு பல சவால்களை கொடுத்தாலும் எப்போதும் என் அருகில் இருப்பதற்கு நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் சாயிஷா.