ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கும் சூரி, அதையடுத்து பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.
அதோடு விடுதலை படத்தின் தயாரிப்பாளர் இயக்கும் ஒரு படத்திலும் நாயகனாக நடிப்பதற்கும், ராம் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் நடிக்கவும் சூரியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படி கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி விடுதலை படம் திரைக்கு வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்கிறார்கள். வடிவேலு, சந்தானம், யோகிபாபுவை தொடர்ந்து இன்னொரு காமெடி நடிகரான சூரியும் முழு நேர ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது.
அதேசமயம் சூரி, தான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லை, சினிமாவில் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் என விடுதலை பட விழாவில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.