ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை, பின்னணி பாடகி என இரண்டு பாதைகளில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மகளிர் தினம் என்பதால் நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த பதிவில், பெண்ணாக இருப்பதற்கு என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அருகே உடை அணியாமல் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நல்லதொரு உடை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இப்படி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கலாமே என்று ஆண்ட்ரியாவை விமர்சனம் செய்தனர். பலரும் அவரின் தனிப்பட்ட உரிமை என ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.