எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூ.,வில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது அண்ணன் சிவா விரைவில் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்திக்க இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், பாலா தற்போது சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரிலேயே சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளார். அவருடன் மலையாள திரை உலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் சில திரை உலக பிரபலங்களும் உடன் சென்று வந்துள்ளனர். மேலும் பாலா தங்களுடன் நன்றாக பேசினார் என்றும் அவர் சுய நினைவில்லாமல் இருக்கிறார் என வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பாலா மலையாளத்தில் 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படத்தில் உடன் நடித்த நடிகரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான உன்னிமுகுந்தன் குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது, தனக்கு பேசிய சம்பளத்தை அவர் வழங்கவில்லை என்றும் தன்னை போல் பலருக்கும் அவர் சம்பள பாக்கி வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். ஆனால் அதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன், தகுந்த வங்கி கணக்கு ஆதாரங்களுடன் பாலா உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் சரியாக செட்டில் செய்யப்பட்டு விட்டதாக கூறினார்.
மேலும் பாலா எப்போதும் தனக்கு நண்பன் தான் என்றும் அவர் மீது தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும் அப்போது கூறியிருந்தார் உன்னி முகுந்தன். இந்த நிலையில் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து பாலாவை மருத்துவமனையில் சந்தித்து உன்னி முகுந்தன் ஆறுதல் கூறி சென்றுள்ளது சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.