கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் |
தமிழ் திரையுலகில் நடனக்குழுவில் ஒருவராக இடம் பெற்று, தற்போது ரஜினி, விஜய் என முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு ரொம்ப பிசியான நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இன்னொரு பக்கம் சாண்டி சில படங்களில் ஒரு நடிகராகவும் நடித்து வருகிறார். ‛லியோ' படத்தில் சிறிய வில்லனாக நடித்த இவர், அதன் பிறகு ‛ஹாட்ஸ்பாட், நிறம் மாறும் உலகில்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர தற்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் சாண்டி. அந்த வகையில் திலீப் நடிப்பில் உருவாகி வரும் ‛பா பா பா' மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்துள்ள ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் லோகா சாப்டர் 1 ; சந்திரா படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகிறது.. சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கிறார். பிரேமலு புகழ் நடிகர் நஸ்லேன் கதாநாயகனாக நடிக்க, ஒரு வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாண்டி. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது படத்திலும் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது நன்றாக தெரிகிறது. மலையாளத்தில் இது இவரது முதல் படம் என்பதால் மலையாள ரசிகர்களையும் சாண்டி கவருவார் என எதிர்பார்க்கலாம்.