Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது கடைசி படம் இதுவாக இருக்கலாம்: கமலிடம் சொன்ன பாரதிராஜா

07 மார், 2023 - 02:00 IST
எழுத்தின் அளவு:
This-may-be-my-last-film:-Bharathiraja-said-to-Kamal

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கி உள்ள பட 'கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியல் கமல், தங்கர் பச்சானிடம் பேசும்போது “தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள்” என்றார். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்திக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நண்பனின் துரோகத்தை ‛பியூட்டி' என்ற பெயரில் படமாக்கிய இயக்குனர்நண்பனின் துரோகத்தை ‛பியூட்டி' என்ற ... புஷ்பா- 2 படத்தில் இணைந்த சாய் பல்லவி புஷ்பா- 2 படத்தில் இணைந்த சாய் பல்லவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)