புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சமூக வலைத்தளங்களில் டுவிட்டரில்தான் சினிமா ரசிகர்களின் சண்டைகள் அதிகம் நடக்கிறது. அவை தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் கடந்த சில வருடங்களாக அத்துமீறி நடந்து வருகிறது. அதைப் பற்றி டுவிட்டர் நிறுவனம் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களும் கவலைப்படுவதில்லை.
ஆனால், பொதுவெளியில் அவர்கள் டிரெண்டிங்கிற்காகப் பயன்படுத்தும் வார்த்தைகளால் டுவிட்டர் பக்கம் போகவே யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. நேற்று மாலை முதல் திடீரென ரஜினிகாந்தைத் தரக்குறைவாக விமர்சித்து ''செத்த பாம்பு ரஜினி'' என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு டிரெண்டிங் ஆரம்பமானது. அதை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்தனர். அது இன்று காலை வரை போய்க் கொண்டிருக்கிறது.
பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து, “செத்த அணில் குஞ்சு விஜய்” என டிரெண்டிங் செய்து வருகிறார்கள். அதோடு ரஜினி மீதான நெகட்டிவ்வான டிரெண்டிங்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “கோலிவுட் பிரைடு ரஜினி” என்றும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
யார் அடுத்த சூப்பர் ஸ்டார் ? என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. அதனால், விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இப்படி அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.