'பெங்கால் பைல்ஸ்' என டைட்டில் மாற்றப்பட்ட 'டெல்லி பைல்ஸ்' | வில்லன் நடிகரின் துக்கத்தை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துகிறதா படக்குழு? | தந்தையின் 70வது பிறந்தநாளில் 75 பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்கிய தீபிகா படுகோனே | 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தை இலவசமாக யுடியூபில் வெளியிட்ட மோகன்லால் | இலங்கை அகதிகள் பின்னணியில் உருவான மற்றொரு படம் | லாஜிக்கை விட, ரசிகர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்: என்.டி.பாலகிருஷ்ணா | படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் |
2023ம் ஆண்டின் மூன்றாம் மாதம் இன்று ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 25 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அவற்றில் 'வாரிசு, துணிவு, வாத்தி, டாடா' ஆகிய நான்கே படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
இந்த மாதம் பள்ளிகளுக்கான தேர்வு மாதம் என்று இருந்தாலும் பல படங்கள் வெளிவர உள்ளன. இந்த முதல் வாரத்திலேயே மார்ச் 3ம் தேதி 6 படங்கள் வெளியாக உள்ளன.
புதுமுகம் இஷான் நடித்துள்ள 'அரியவன்', சசிகுமார் நடித்துள்ள 'அயோத்தி', பிரபுதேவா நடித்துள்ள 'பாகீரா', சிறிய நடிகர்கள் நடித்துள்ள 'கிடுகு', அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள 'பல்லு படாம பாத்துக்க', அசோக் நடித்துள்ள 'விழித்தெழு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டாலும் குறிப்பிடும்படி இல்லை.
பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள், சிறிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களை சரியாகச் சென்று சேராததே இதற்குக் காரணம் என கோலிவுட்டிலேயே நொந்து போய் சொல்கிறார்கள்.