9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கடந்த 2023ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் 'அயோத்தி'. இப்படத்தின் கருத்து அனைவரின் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது சசிகுமார் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராக உள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார், அயோத்தி படத்தின் மூலம் நடந்த நன்மை குறித்து கூறியதாவது, "அயோத்தி படத்தினால் விமானத்தில் உடலை கொண்டு செல்வதற்கு தேவையான நடைமுறையை எளிமையாய் மாற்றி, 1 லட்சம் வரை மானியமும் கொடுக்கிறார்கள். இதனால் 500 குடும்பங்கள் பயனடைந்துள்ளன என என்னிடம் ஒருவர் சொன்னார். எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நிகழ்ந்திருக்கிறது என்பது மிக சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்தார்.