ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் |
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷான், சிவராஜ் குமார் , நிவேதா சதிஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான நடிகரும், இயக்குனருமான விஜய் குமார், கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.