தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், மாதவன், சிம்ரன், கீர்த்தனா மற்றும் பலர் நடித்து 2002ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளிவந்த படம் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இலங்கைத் தமிழர் போராட்டத்தின் பின்புலத்தைக் கதையாகக் கொண்டு, தத்தெடுக்கப்பட்ட ஒரு இலங்கைத் தமிழ் சிறுமியைப் பற்றிய உணர்வுபூர்வமான படமாக இப்படம் வெளிவந்தது.
மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ், பிரகாஷ்ராஜ், சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களின் உணர்வுபூர்வமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. ஏஆர் ரஹ்மானின் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக அறிமுகப் பாடகியாக சின்மயி பாடிய 'ஒரு தெய்வம் தந்த…' பாடல் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. எம்எஸ்வி பாடிய 'விடை கொடு எங்கள் நாடே' பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடலாக அமைந்தது.
அந்த ஆண்டிற்காக சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஆடியோகிராபி, சிறந்த எடிட்டிங் என ஆறு தேசிய விருதுகளை அப்படம் பெற்றது.
தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ஒரு முக்கியமான படமாக கருதப்படும் ஒரு படம் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.