ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
முத்துக்குமார் இயக்கத்தில், அபி நட்சத்திரா, அனுமோள், மதன், லிங்கா, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த வெப் தொடர் 'அயலி'.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையுடன் வெளியான இத்தொடருக்கு ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமூக ஊடகங்களில் ஒரு விவாதத்தையும் இத்தொடர் ஏற்படுத்தியுள்ளது.
இத்தொடரை இயக்கிய முத்துக்குமாரை அழைத்து பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், தொடரைப் பற்றி, “'அயலி'. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று,” என்றும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.