பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும் 62 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. கதையில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். இந்தப்படம் தொடர்பாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட விஷயங்களை நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்தநிலையில் தற்போது மகிழ் திருமேனி சொன்ன கதை கிட்டத்தட்ட அவருக்கு ஓகே ஆகிவிட்டதாம். ஆனபோதிலும் படத்தில் ஆங்காங்கே மாஸான ஆக்சன் காட்சிகள் இடம் பெற வேண்டும் என்று கூறிய அஜித்குமார், அதுபோன்ற காட்சிகள் எந்தெந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். அதையடுத்து அவர் சொன்னது போலவே தற்போது அந்த கதையில் திருத்தம் செய்து வருகிறார் மகிழ்திருமேனி. தற்போது தனது குடும்பத்தாருடன் வெக்கேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித்குமார், இந்தியா திரும்பியதும் அவரது 62 வது படம் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.




