சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோ ஆனவர் சரத்குமார். இவரும் நடிகை ராதிகாவும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இருவருமே திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன், வாரிசு போன்ற படங்கள் திரைக்கு வந்தன. அதேபோல் ராதிகா நடிப்பில் வெந்து தணிந்தது காடு, லவ் டுடே என பல படங்கள் திரைக்கு வந்தன. இந்தநிலையில் சமீபத்தில் சரத்குமாரும் ராதிகாவும் தங்களது 22 வது திருமணநாளை கொண்டாடினார்கள். அதையடுத்து தனது இன்ஸ்டாவில் தங்களது போட்டோக்களை தொகுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சரத்குமார்.
அதில், ‛‛22 ஆண்டுகள் அன்பு, புரிதல், ஒற்றுமை என மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வு நீண்ட பேரின்ப பயணம். வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்து இருந்தாலும் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. இன்று போல் என்றும் ஒன்றாகவும், அழகான குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.