பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து வேட்டை, வெடி ஆகிய படங்களில் நடித்தார். 2014ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவருக்கு இரண்டு குழந்தைகாள் உண்டு. இந்த நிலையில் மகேஷ்பாபு படத்திற்காக ஆர்வமுடன் கலந்து கொண்ட ஆடிஷனில் தான் செலக்ட் ஆகவில்லை என்பதால் கதறி அழுதேன் என்று பழைய நினைவுகள் பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் சமீரா ரெட்டி.
இது குறித்து அவர் கூறும்போது, “திரையுலகில் எனது முதல் ஆடிசன் 1998-ல் நடந்தது. அப்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கான கதாநாயகி தேர்வுக்காக ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீடு திரும்பும் வழியிலேயே அழுது கொண்டே வந்தேன். அதன்பிறகு நமக்கு சினிமா சரிப்பட்டு வராது ஏதாவது வேலையில் சேரலாம் என நினைத்து ஒமேகா வாட்ச் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். திரும்பவும் துணிச்சலுடன் நடிப்பில் இறங்க முடிவுசெய்து எனது முதல் வீடியோ இசை ஆல்பத்தில் நடித்தேன்” என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
அப்படி மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடிக்க அவர் ஆடிஷனில் கலந்து கொண்ட படம் 'ராஜகுமாரடு'. அந்த படத்தில் பின்னர் கதாநாயகியாக தேர்வானவர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, அதன்பிறகு 2005-ல் நரசிம்மடு என்கிற படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்தார் சமீரா ரெட்டி.