கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆந்திராவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தினசரி திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டரில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகிறார். இந்த படத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் அவர் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே சமயம் முதல் பாகத்தில் இறந்துபோன மகன் கமல் போன்று இந்த படத்திலும் இளமை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாரா என்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் சேனாதிபதி கமலின் இளமைகாலம் தொடர்பான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபால், கமலுடன் இணைந்து ஜிம் ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கமல் இந்தியன் படத்தில் நடித்த அதே சந்துரு கதாபாத்திரம் போலவே இளமையாக காட்சியளிக்கிறார் என்றும் இந்தியன் 2 படத்திலும் அவரது இளமையான கதாபாத்திரம் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த புகைப்படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2017ல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பலருக்கும் தெரியவில்லை. இது ஏதோ இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.