ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபலமான ஹாலிவுட் வெப் தொடர் 'சிட்டாடல்'. பிரியங்கா சோப்ரா, ஸ்டேன்லி டுச்சி, ரிச்சர் மேட்டன் நடித்துள்ள இந்த தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த தொடரின் இந்தியன் வெர்சனை அமேசான் ப்ரைம் வீடியோ தயாரிக்கிறது. இதனை தி பேமிலி மேன் தொடரை இயக்கிய இரட்டையர்களான ராஜ்,டிகே இயக்குகிறார்கள். இதில் பிரியங்கா சோப்ரா நடித்த கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். அவருடன் வருண் தவான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்தியா, செர்பியா, தென் ஆப்பரிக்கா நாடுகளில் நடக்கிறது. இது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ராஜ்,டிகே கூறும்போது “தி பேமிலி மேன் தொடருக்கு பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது”என்கிறார்கள்.