ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை படம் நாளை (பிப்.3) வெளிவருகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானேன். இன்று 40 ஆண்டுகளை கடந்தும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் சமூக உணர்வோடும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 70 படம் இயக்கி இருக்கிறேன்.
என் மகன் விஜய்யை டாக்டராக்க விரும்பினேன். அவன் நடிகராக வேண்டும் என்றான். மகனின் கனவை நிறைவேற்ற வேண்டியது தந்தையின் கடமை அல்லவா? அதனால் அவனை நடிகனாக்கினேன். அவரை வைத்து நானே படங்கள் தயாரித்து, இயக்கி அவரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக்கினேன். அதன்பிறகு பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தனர். அவரும் தன்னுடைய கடின உழைப்பால் தன்னை செதுக்கி கொண்டு இன்று மக்கள் நெஞ்சங்களில் தளபதியாக உயர்ந்திருக்கிறார்.
ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றம் முக்கியம் என்பதால் நானே முதல் ரசிகனாக இருந்து ரசிகர் மன்றம் தொடங்கினேன். அது இப்போது மக்கள் இயக்கமாக மாறி, மாபெரும் இளைஞர் படையை கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைந்த நான், அந்த மகிழ்ச்சியால் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக்கூடாது என்பதால் இன்றைய இளைய தலைமுறையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன். அதன் விளைவுதான் நான் கடவுள் இல்லை படம். சட்டம் ஒரு இருட்டறையில் எந்த அளவிற்கு உழைத்தேனோ அதே அளவிற்கு இந்த படத்திற்கும் உழைத்திருக்கிறேன். ஒரு வெற்றி கலைஞனாகவே என் கடைசி மூச்சு அடங்க வேண்டும் என்று விரும்பியே இந்த படத்தை நான் இயக்கி இருக்கிறேன். என் உழைப்புக்கு வெற்றியை பரிசாக மக்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.