துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார் .
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. இந்த தகவலை படக்குழுவினர் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை வரும் மார்ச் 31ம் தேதி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளது.